சமூக ஒடுக்கு முறைகளிலிருந்து மக்களை பாதுகாத்து அவர்களு க்கான உரிமைகளை வென்றெடு த்து கொடுப்பதே எமது நிலைப்பா டாகும் – டக்ளஸ் தேவானந்தா

Saturday, July 1st, 2017

சமூக ஒடுக்கு முறைகளிலிருந்து மக்களை பாதுகாப்பது மட்டுமன்றி அவர்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதுமே எமது கட்சியின் நிலைப்பாடாக நாம் முன்னெடுத்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற வலி.கிழக்கு மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களைப் போன்று மக்கள் எதிர்காலங்களில் உசுப்பப்றல்களுக்கும் உணர்ச்சிப் பேச்சுக்களுக்கும் எடுபட்டு தமது இயல்பு வாழ்வை எப்படித் தொலைத்தார்கள் என்று அனுபரீதியாக கற்றுக்கொண்டுள்ளனர். அதுமட்டுமன்றி அதனால் ஏற்பட்ட அவலங்களையும் துன்ப துயரங்களையும் மக்கள் இன்று தமது வாழ்வினூடாக கற்றறிந்து கொண்டுள்ளனர். எனவே எதிர்காலங்களில் வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான உணர்ச்சிப் பேச்சுக்களுக்கும் உசுப்பேற்றல்களுக்கும் எடுபடாத யதார்த்த வழிமுறை சென்று மக்களுக்காக உழைப்பவர்களையும் சேவை செய்பவர்களையும் இனங்கண்டு அவர்களை தெரிவு செய்யவேண்டியது அவசியமானது மட்டுமன்றி காலத்தின் கட்டாயமாகவும் உள்ளது.

எமது கட்சியின் வரலாற்றில் மக்கள் இடர்பட்ட போதிலும் துயர்பட்ட போதிலும் பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுத்து மக்களுக்கான பணிகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்திருக்கின்றோம். மக்களின் வாழ்வாதார மேம்பாடாக இருந்தாலும் சரி உட்கட்டுமான அபிவிருத்திகளாக இருந்தாலும் சரி நாம் முன்னெடுத்து சாதித்துக் காட்டியிருக்கின்றோம். அந்த வகையில் மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாகவும் சமூக ஒடுக்கு முறைகளிலிருந்து மக்களை பாதுகாப்பது மட்டுமன்றி அவர்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதிலும் நாம்  தொடர்ச்சியாக உழைத்து வருவது மட்டுமன்றி எதிர்காலங்களில் அர்ப்பணிப்புடன் உழைக்க தயாராகவும் இருக்கின்றோம்.

குறிப்பாக வலி.கிழக்கில் மக்கள் குடியிருப்புகளின் மத்தியில் உள்ள இந்த மயானங்களில் சடலங்கள் எரியூட்டப்படும் போது அதனால் வரும் புகையினால் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய அசளகரியங்கள் மற்றும் நோய்த் தாக்கங்கள் சமூக பிரச்சினைகளிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது கடப்பாடாகும். இதை உணர்ந்து கொண்டு அனைத்து தரப்பினரும் உண்மையுடனும் நேர்மையுடனும் உழைக்க வேண்டும்.

இவ்விடயம் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடி அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்க நாம் முன்னெடுப்போம் எனவும் அதற்கு மக்களும் முழுமையான ஆதரவுகளை எமக்கு நல்க வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

இச் சந்திப்பின் போது விவசாய அமைப்புகள், சனசமூக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமது பிரச்சினைகளை டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். இதன்போது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி.கிழக்கு பிரதேச அமைப்பாளர் இராமநாதன் ஐங்கரன் அவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தார்.

Related posts: