எம் வசம் கிடைக்கும் உள்ளூராட்சி சபைகள் ஊர் பிரமுகர்களைக் கொண்ட ஆலோசனைச் சபையின் ஆலோசனைகள் பெற்றே நிர்வகிக்கப்படும்!

Tuesday, February 6th, 2018
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின்போது, எமது மக்கள் தங்களது உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கக்கூடிய அரசியல் அதிகாரத்தினை எமது கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வழங்கினால், அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்;கென அந்தந்தப் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் சார்பற்ற, சமூக அக்கறை கொண்ட ஊர் பிரமுகர்களைக் கொண்டு அமைக்கப்படுகின்ற ஆலோசனைக் குழுக்களின் ஆலோசனைகள் பெற்றே அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகங்கள் முன்னெடுக்கப்படுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தேசிய அரசியல் நீரோட்டத்திற்கு நாங்கள் பிரவேசித்ததன் பின்னர், ஆளுந் தரப்புகளுடன் இணைந்து செயற்பட்ட அனுபவங்களையும், எதிர்த் தரப்பினில் இருந்து செயற்படுகின்ற அனுபவங்களையும் நாம் நிறையவே பெற்றுள்ளோம். அந்தவகையில், கடந்த காலங்களில் யுத்தம் இடம்பெற்றிருந்த காலங்களிலும், யுத்தம் முடிவுற்றதன் பின்னரான காலங்களிலும் பல உள்ளூராட்சி சபைகளை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நாம் நிர்வகித்து வந்துள்ளோம். அந்த வகையில் அந்தந்த நிர்வாகங்களின் சாதக, பாதகத் தன்மைகளையும் நாம் ஆராய்ந்திருக்கின்றோம். மேலும், நாம் தொடர்ந்திருந்த வேலைத்திட்டங்கள் பல முடிவுறுத்தப்படாத நிலையிலும் உள்ளன. தொடங்க நினைத்த பல வேலைத் திட்டங்கள் தொடங்கப்பட அவாகாசங்கள் வாய்க்காத நிலையும் உள்ளன. அப்போது நாம் திட்டமிடாத சில வேலைத்திட்டங்களின் தேவைகளும் பல பகுதிகளில் இன்று காணப்படுகின்றன. அவை குறித்து நாம் இனங்கண்டு, அவற்றுக்கான திட்டங்களை தீட்டியுள்ளோம். அன்று நாம் தொடர்ந்திருந்த அபிவிருத்தித் திட்டங்கள் இன்று எமது பகுதிகளில் முடக்கப்பட்டுள்ள நிலையும் தொடர்கின்றது. எனவே, இவை அனைத்தையும் முன்னேற்றத்தினை நோக்கி நகர்த்த வேண்டியுள்ளன.
அதே நேரம், அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களை மேலும் வினைத்திறன்மிக்கதாக முன்னெடுப்பதற்காகவும், அந்தந்தப் பகுதி மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்காகவும், அந்தந்தப் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சமூக ஆர்வளர்களான சமூகப் பெரியார்கள், மதப் பெரியார்கள், கல்வியியலாளர்கள், சூழலியலாளர்கள், சட்டத்துறை வல்லுநர்கள், வர்த்தக சமூகத்தினர், புத்திஜீவிகள,; துறைசார் நிபுணர்கள் போன்றவர்களை உள்ளடக்கிய  ஆலோசனைக் குழுக்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்த குழுவில் அடங்குவோர், அரசியல் சார்பற்ற, சமூக ஆர்வளர்களாகவே இருப்பார்கள். இவர்களது ஆலோசனைகளைப் பெற்று, அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகத்தினை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும். இத்தகையதொரு ஏற்பாடானது, சிறந்த நிலைபேறான அபிவிருத்திக்கு நிச்சயமாக வித்திடும் என்பது எனது நம்பிக்கையாகும் என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழ் மக்களின் நலனுக்காக சகிப்புத் தன்மையும் விட்டுக்கொடுப்பும் அவசியம் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஐஸ் பெட்டிகள் வழங்கிவ...
இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் விவசாய நடவடிக்கைகளுக்கு நஸ்டஈடு - அம்பன் புயலினால் பாதிக்கப்பட்...

புலம்பெயர் தேசங்களிலும் எமது நாட்டின் கலை கலாசார விழுமியங்கள் பேணப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ்...
வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்; 6 ஆயிரம் ரூபாவினைப் பெறுவதற்கானது அல்...
இழப்பீடுகளை பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வலி கிழக்கு பிரதேச விவசாயிகள் நன்றி தெரி...