ஈ.பி.டி.பியின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று!

Saturday, May 7th, 2016

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் முதல்நாள் அமர்வு நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்றையதினம் எழுச்சி மாநாட்டின் முதலாம் நாள் அமர்வு நடைபெற்றது.

முன்பதாக கட்சிக்கொடியினை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து மங்கள விளக்கு ஏற்றிவைக்கப்பட்டது.

பிரதான மண்டபத்தில் நிர்வாகச் செயலாளர் இராசமாணிக்கத்தின் வரவேற்று உரையுடன் ஆரம்பமான முதலாம் நாள் அமர்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா மட்க்களப்பு, அம்பாறை, திருகோணமலை  ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பங்கெடுத்திருந்தனர்.

அத்துடன் நாட்டின் ஏனைய பாகங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்களுடன் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்திருந்த முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.

இதனிடையே நாளையதினம் பிற்பகல் 2 மணியளவில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய எழுச்சி மாநாட்டில் வெளியிடப்படவுள்ள பிரகடன தீர்மானங்கள் இறுதிசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSCF5357

 DSCF5356

DSCF5393

7bc0bcac-7629-44be-813f-30beb49ac8c2 9b715f37-f03f-4075-aab5-bf96e2f4dc2c

   f1862a95-7bf9-4858-b4c7-b8926586d8a4

e74b5644-9829-45a4-b846-825a6062c27d

f3bf40e9-259a-4249-b19d-48571a84d56c

 66544957-31c8-42e4-bb4e-80836a09b4a5 28845f9b-ed7d-4172-806a-eb1731ad0cb4 0b451165-49ee-4ae0-83ba-6745de062b2f 6102590d-f0e6-4703-9f03-f623a069b36c

3bb496d0-0204-4581-80bf-6cd1ebe8be24

468d9c33-0dc8-46f0-8f46-0eb287e0c6ff

e961182e-8f83-479f-9a88-fea1ee5c71af494ec843-04a5-4d0f-8888-92498f003e53

  1284a6aa-e670-432b-a57b-36c3f020e62b

ff3bfbdb-3293-4b93-88cb-e18cbcf4c62e

24a56546-012d-4422-9fcf-00c5498b77c8

Related posts:


முன்னாள் புலி உறுப்பினர்கள் மீது நெருக்கடிகளும் அச்சுறுத்த ல்களும் அதிகரித்துள்ளன - டக்ளஸ் தேவானந்த...
மன்னாரில் கடலட்டை இனப் பெருக்க நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அங்குரார்ப்பணம்!
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் எடுத்த அதிரடி...