அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார் யாழ் மாவட்ட கட்டளை தளபதி!

Saturday, December 31st, 2022


…….
யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ணா போதோட்ட, மரியாதை நிமிர்த்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், அண்மைக்காலமாக அதிகரித்துள்ள மாட்டுத் திருட்டு, போதைப் பொருள் பாவனை, வாள் வெட்டு உட்பட்ட சமூக விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், தேசிய பாதுகாப்புக்கு  அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கின்ற காணிகளை விடுவித்தல் மற்றும் பாடசாலை மைதானம் போன்ற பொது இடங்களை புனரமைப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டது. – 31.12.2022

Related posts: