பாடசாலைப் பக்கமே போகாத 1,523 பேர் சிறைச்சாலையில்!
Tuesday, January 16th, 2018
ஒரு நாளேனும் பாடசாலைக்குச் செல்லாத ஆயிரத்து 523 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தரம் ஐந்து வரையில் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த 6 ஆயிரத்து 129 பேரும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஜி.சி.ஈ சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த 2 ஆயிரத்து 643 பேரும், உயர் தரத்தில் சித்தியடைந்த 909 பேரும் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறைச்சாலைகளில் 55 பட்டதாரிகளும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை, போகம்பரை, மகர உள்ளிட்ட 25 சிறைச்சாலைகளில் 24 ஆயிரத்து 60 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
சிவில் பாதுகாப்பு படை திணைக்களம் தனது முன்னைய பெருமையை மீண்டும் பெற்று வருகிறது - பாதுகாப்பு செயலாள...
இலங்கையை மீண்டும் முடக்குமா கொரோனா - மேலும் 6 பேர் அடையாளம்!
யாழ் போதனா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைகள் ஆரம்பம் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!
|
|
|


