யாழ் போதனா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைகள் ஆரம்பம் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!
Friday, June 23rd, 2023யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், இன்றுமுதல் கண் சத்திர சிகிச்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் இல்லாத காரணத்தினாலும் சத்திர சிகிச்சைக்கு தேவையான பொருட்கள் இல்லாத காரணத்தினாலும் கடந்த 2 வருடங்களாக குறித்த சத்திர சிகிச்சையானது முன்னெடுக்கப்பட்டவில்லை.
இந்நிலையில் தற்போது கண் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் பதவியேற்றுள்ளார். இதன்காரணமாக, இன்றுமுதல் யாழ்ப்பாண வைத்தியசாலையில், கண் சத்திர சிகிச்சை மேற்கொளளப்படும் என தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்: அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க!
பின்கதவால் அரசுடன் பேச்சு : மக்கள் நடுத்தெருவில் - சிவசக்தி ஆனந்தன்!
சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டதற்கிணங்கவே இராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர் - வைத்தியசாலைகளின் தேவைகள...
|
|
|


