விமானிகள் வேலை நிறுத்தம்: 3 லட்சத்திற்கு மேலானோர் பாதிப்பு!
Saturday, November 26th, 2016
விமானிகளின் வேலைநிறுத்த போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கின்ற நிலையில், ஜெர்மனி பயணியர் போக்குவரத்து நிறுவனமான லூஃப்தான்ஸாவின் 800-க்கு மேற்பட்ட விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விமானிகள் வைக்கின்ற சுமார் 4 சதவீத ஊதிய உயர்வு கட்டுபடியாகாது என்று லூஃப்தான்ஸா நிறுவனம் கூறுகிறது.சமீபத்திய இந்த வேலைநிறுத்தம் புதன்கிழமை தொடங்கிய நிலையில், உள்நாட்டிலும், ஐரோப்பாவிலும் 3 லட்சத்திற்கு மேலான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.2014 ஆம் ஆண்டு முதல் இந்த விமான போக்குவரத்து நிறுவனத்தில் நடைபெறும் 14-வது வேலைநிறுத்தம் இதுவாகும்.

Related posts:
தற்கொலை தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்ட சிரிய பிரஜை கைது!
குவைற்றிலிருந்து வட கொரியர்கள் வெளியேற்றம்!
உயர்மட்ட ஜெனரல் கொலை - அமெரிக்க அரசாங்கம் 50 பில்லியன் அமெரிக்க டொலரை இழப்பீடாக வழங்க வேண்டு - ஈரான...
|
|
|


