பிரேஸிலில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழப்பு!
Saturday, July 8th, 2023
பிரேஸிலின் வடகிழக்கு பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 8 பேர் உயிரிழந்ததுடன், 5 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேநேரம், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பலர், மீட்பு படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த அனர்த்தத்திற்கான காரணம், இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமைதி உடன்படிக்கை நிராகரிப்பு: புதிய வழிமுறைக்கு எதிர்க்கட்சிகளோடு ஆய்வு!
மாலியில் பாரிய தீவிரவாதத் தாக்குதல்!
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வாழ்த்து!
|
|
|


