தற்கொலை தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்ட சிரிய பிரஜை கைது!
Wednesday, May 31st, 2017
பேர்லினில் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த சிரியாவை சேர்ந்த பதின்ம வயது இளைஞனை அந்நாட்டு காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
தலைநகரில் தற்கொலை தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த சிரியா இனைஞனை கைதுசெய்துள்ளோம் என ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இளைஞன் தனது தாய்க்கு அனுப்பிய தகவலை இடைமறித்தவேளையே இந்த திட்டம் குறித்து தெரியவந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.தனது தாய்க்கான செய்தியில் தான் தற்போதே ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக அந்த இளைஞன் தெரிவித்திருந்தான் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள நபர் 2015 இல் ஜேர்மனிற்கு புகலிடம்கோரி தனியாக வந்திருந்தார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
Related posts:
இரு நாட்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!
பெய்ரூட் வெடிப்பச் சம்பவம்: இலங்கை தூதரகம் சேதம் - இலங்கையர்கள் பலர் காயம்!
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை - உள்விவகார அமைச்சர் சுயெல்லாபதவி நீக்கம்!
|
|
|


