மின் விநியோகத்திற்கு பாதிப்பில்லை!
Sunday, October 2nd, 2016
நிலவும் வரட்சியான காலநிலை எதிர்வரும் 10ம் திகதிக்கு பின்னர் மாற்றமடையலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் எதிர்வரும் காலங்களில் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, வரட்சியான காலநிலை காரணமாக மின் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்
தற்போது மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகிலுள்ள நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் நூற்றுக்கு 53 வீதம் காணப்படுவதாக, அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்த்தன குறிப்பிட்டுள்ளார். எனவே மின் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
பாடசாலை மாணவர்களின் சீருடை வெளச்சர் காலம் நீடிப்பு!
கொரோனா தாக்கம்: எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு - இராணுவத்தளபதி சவேந்திர சில்வா கோரிக்கை!
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - 8 பேர் பலி!
|
|
|


