தூதரகங்களிற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு!
Tuesday, June 9th, 2020
கொழும்பிலுள்ள அமெரிக்க மற்றும் சீன தூதரகங்களிற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஜோர்ஜ் புளொயிட்டின் கொலைக்கு எதிராக முன்னிலை சோசலிச கட்சி இன்று அமெரிக்க தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
இந்தநிலையிலேயே நீதிமன்றத்தினால் இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொழும்பில் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கொரோனா வைரசினால் இலங்கை சந்தித்துள்ள பொருளாதார இழப்புகளிற்கு நஸ்டஈடு கோரி சீனா தூதரகத்திற்கு முன்பாக நாளைய தினம் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சிறைச்சாலையின் பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு!
யாழ்ப்பாணத்தில் 3 ஆயிரதது 600 ஐ தாண்டியது கொரோனா தொற்று - 2ஆம் கட்ட தடுப்பூசி சிலதினங்களில் கிடைக்க...
இலங்கையின் கையிருப்பு 2 பில்லியன் டொலர் – மத்திய வங்கி அறிவிப்பு!
|
|
|


