நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
Monday, April 25th, 2022
நாட்டின் பல பகுதிகளில் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்று அதிகரித்து வீசக்கூடும்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு மருத்துவர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்க ஒரு வாரம் அவகாசம் - மருத்துவ அதிகாரிகள் சங்...
கோட்டாபயவிற்கு எதிரான மனு ஏகமனதாக நிராகரிப்பு!
இலங்கையில் குறைவடைந்தது கொவிட் தொற்று!
|
|
|


