இலங்கையில் குறைவடைந்தது கொவிட் தொற்று!
Sunday, July 4th, 2021
இலங்கையில் நீண்ட நாட்களின் பின் 1500 இற்கும் குறைவான கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை நேற்றையதினம் பதிவாகியுள்ளது.
அதன் அடிப்படையில் நேற்றைய தினம் ஆயிரத்து 262 பேரே கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அண்மைய நாட்களில் 3 ஆயிரத்தை அண்மித்த கொவிட் தொற்று தற்போது குறைந்து வருவதாக சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இதுவரை கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அதிக தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர்.
ஆனால் தற்போது கொழும்பில், கொரோனா தொற்றாளர்கள் பதிவாகும் தன்மை திடீரென குறைவடைந்துள்ளது. இதன்படி, நேற்றையதினம் 98 பேர் மாத்திரமே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சட்டவிரோதமாக விமானத்தில் கடத்தப்படும் சுறா மீன் இறகுகள்?
அரசியலில் இருந்து தான் ஓய்வுபெற போவதில்லை - பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!
மே 9 சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 1,500 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
|
|
|


