எம்.எஸ்.சீ மெசினா கப்பல் இலங்கையின் கடல் எல்லையில் இருந்து வெளியேறியது – கடற்படை அறிவிப்பு!
Sunday, June 27th, 2021
கொழும்பு துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்து கொண்டிருந்தவேளை தீப்பற்றிய எம்.எஸ்.சீ மெசினா என்ற கப்பல் தற்போது இலங்கைக்கு உட்பட்ட தேடல் மற்றும் மீட்பு பிராந்தியத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருக்கு சொந்தமான ரீ.சீ விகர் என்ற இயந்திரத்தின் உதவியுடன் குறித்த கப்பல் நேற்று மாலை இழுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதாக கிழக்கு கடற்பரப்பின் கிரிந்தை – மஹா இராவணன் கலங்கரை விளக்கத்தில் இருந்து 480 கடல்மைல்களுக்கு அப்பால் பயணித்து கொண்டிருந்தபோது குறித்த கப்பலின் இயந்திர அறையில் தீப்பரவல் ஏற்பட்டது.
குறித்த கப்பலில் ஏற்பட்ட தீ நேற்று காலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் அந்த கப்பல் சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
3 மணி நேரத்திற்குள் 50 ஏவுகணை தாக்குதல் - உக்ரைனை திணறடித்த ரஸ்யா!
மாத்தளை சம்பவம் - கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
அனலைதீவு கடலில் வைத்து 211 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!
|
|
|


