மஹியங்கனை எரிப்பொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து!

Sunday, August 21st, 2016

மஹியங்கனை பிரதான வீதியில் தெல்தெனிய பகுதியிலுள்ள தனியார் எரிப்பொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கொண்டு சென்ற, பவுசர்களில் தீ பரவியதாலே நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   இந்தச் சம்பவத்தை அடுத்து, கொழும்பு மகியங்கனை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

காலநிலை செழிப்பு திட்டத்தை வெற்றியடைய செய்ய இலங்கைக்கு 26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை - ஜனாதி...
நாடு முழுமையாக இன்னும் மீளவில்லை - முக்கியமான சீர்திருத்தங்களை எந்தவகையிலும் மாற்றியமைக்கக் கூடாதென ...
தொழில் நுட்பங்களை வலுப்படுத்துவதனூடாக கோழி வளர்க்கும் தொழிலை ஒரு மக்கள் தொழிலாக மாற்றமுடியும் - பிரத...