புதிய பாதீட்டில் வருடம் முழுவதற்கும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது – நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கும் இடமளிக்கப்போவதில்லை என நிதி அமைச்சர் பசில் அறிவிப்பு!

Wednesday, October 13th, 2021

எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் முழு வருடத்திற்கும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படமாட்டாது என தெரிவித்துள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அந்தந்த செயற்திட்டங்களுக்காக கட்டம் கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் எந்தவிதத்திலும் பஞ்சம் ஏற்பட இடமளிக்க போவதில்லையென நாட்டின் உணவு பாதுகாப்பு தொடர்பில் விவசாய அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைச்சுக்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக உற்பத்தி பொருளாதாரத்துடன் தொடர்புடைய திட்டங்களுக்காக மேலும் 25,ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முதல் காலாண்டில் வெற்றியளிக்காத திட்டங்களுக்கு மீண்டும் நிதி ஒதுக்காதிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இடீதவேளை

உலகில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தொற்று நிலைமையின் பின்னர் பட்டினியே உருவாவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

எண்ணெய் விலையை அதிகரிப்பதற்கான தேவை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை இன்னும் ஓரிரு நாட்களில் 100 ரூபாவை தாண்டும். ஆகவே, மசகு எண்ணெய் விலை அதிகரிக்கும். எரிவாயு விலை, பால்மா விலை, பருப்பு விலை ஆகியனவும் அதிகரிக்கும். தொற்று நிலைமைக்கு பின்னர் உலகில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பட்டினியே ஏற்பட்டுள்ளது.

உலகில் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் ஆகிய அனைத்து நாடுகளிலும் இந்த பொருட்களின் விலை எமது நாட்டின் விலையை விட அதிகமானது எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பெட்ரோலிய அமைச்சரால் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாது எனவும் அதிக விலைக்கு கொள்வனவு செய்து குறைந்த விலையில் வழங்க முடியாது எனவும் மாதாந்தம் ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106