காலநிலை செழிப்பு திட்டத்தை வெற்றியடைய செய்ய இலங்கைக்கு 26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
Friday, September 29th, 2023
நாட்டின் காலநிலை செழிப்பு திட்டத்தை வெற்றியடைய செய்ய 2030 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு 26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
‘பேர்லின் குளோபல் உரையாடலில்’ கலந்துகொள்ள நான்கு இரண்டுநாள் பயணமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த புதன்கிழமை ஜேர்மன் நோக்கி புறப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்றையதினம் மாநாட்டில் உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
குறிப்பாக ‘பேர்லின் குளோபல் உரையாடலில்’ உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகிய இரண்டு பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. குறைந்த பட்ச நிதியைக் கொண்டு நாம் இந்த விடயங்களை கையாள வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106