தொழில் நுட்பங்களை வலுப்படுத்துவதனூடாக கோழி வளர்க்கும் தொழிலை ஒரு மக்கள் தொழிலாக மாற்றமுடியும் – பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!

Friday, May 31st, 2024

முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோகம் மூலம்  கோழி வளர்க்கும் தொழிலை ஒரு மக்கள் தொழிலாக மாற்றலாம் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

சீன அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ்  கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கில் முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோக நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொலன்னாவ பிரதேச செயலகத்தில்  இடம்பெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன –

நல்ல அனுபவம் உள்ள ஒருவரை அந்த அனுபவத்தின்  அடிப்படையில் தேர்ந்தெடுத்து கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபடுத்துவதுதான். இங்கு வழங்கப்படும் பயிற்சிக்குப் பின்னர், அந்தத் தொழிலுக்கு உதவும் இயந்திரம் உங்களிடம் ஒப்படைக்கப்படும்.

இதன் மூலம் கோழி வளர்க்கும் தொழிலை ஒரு மக்கள் தொழிலாக மாற்றலாம்.  வீட்டில் ஓரளவு வருமானத்தை ஈட்ட முடியும் மற்றும் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு போசனையான முட்டையைப் பெற முடியும். இந்த நாட்டில் சிரமங்களுக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் சீனக் குடியரசு இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.

புதிய முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் புதிய எண்ணக்கருவுக்கு இதன் மூலம் பெரும் பலம் கிடைக்கிறது. நாம் பெற்ற அறிவை இளைஞர்கள் சுயதொழில்களில் ஈடுபடுவதற்காக வழங்க முடியும். என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106