நிலவும் உலர்ந்த வானிலையில் மாற்றம் ஏற்படும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
நாட்டில் தற்போது நிலவும் உலர்ந்த வானிலையில் சிறிய மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதனடிப்படையில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
70-80Km வேகத்தில் கரையோரப் பகுதிகளுக்கு காற்று வீசும்!
இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணமல்லா சலுகைகள் தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்த...
|
|
|


