கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Saturday, July 13th, 2024

கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்படும் ஆசிரிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த எண்ணிக்கை 5,000 இல் இருந்து 7,500 வரை உயரும் எனக் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் உள்ள 19 கல்வியியற் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இதேவேளை, கல்வி சீர்திருத்தச் செயற்பாட்டுக்கமைய, கொரியா, ஜேர்மன், பிரான்ஸ், ஹிந்தி மற்றும் ஜப்பான் ஆகிய மொழிகளுக்கான ஆசியர்களைப் பாடசாலை கட்டமைப்புக்குள் இணைத்துக் கொள்வதற்குக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106