தேர்தல் செலவினத்தை கட்டுப்படுத்த வேண்டும் – பரந்துபட்ட பேச்சுவார்த்தையொன்றை ஏற்பாடுசெய்யுமாறு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம்!

Friday, July 19th, 2024

ஜனாதிபதித் தேர்தல் அறிவித்தலுடன் தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகள், பொலிஸ் திணைக்களம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுடன் பரந்துபட்ட பேச்சு வார்த்தையொன்றை நடத்த ஏற்பாடுசெய்யுமாறு கோரி நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடித மொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவே, 2023, 03ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இச் சட்டம் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், உள்ளூ ராட்சி மன்றத் தேர்தல் என சகல தேர்தல்களுக்கும் பொருந்தும்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பவற்றுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் என்ற அடிப்படையில் முன்னிலையாகும் வேட்பாளர்களின் சொத்து விபரங்களை பெற்றுக்கொள்வதனூடாக ஒரு அரசியல் கட்சி அல்லது ஒரு வேட்பாளருக்கு செலவு செய்யக் கூடிய அதிகபட்ச நிதியை வரையறுப்பது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும். 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி இச் சட்டம் நிறைவேற்றப்பட்டது முதல் இதுவரையில் எந்தவொரு தேர்தலும் நாட்டில் இடம்பெறவில்லை.

நாடாளுமன்றம் அல்லது மாகாண சபைத் தேர்தலிகளின்போது வேட்பாளர் ஒருவர் சட்டவிரோத செயற்பாடு, கப்பம் கோரல், நிதி உதவி வழங்குதல், அச்சுறுத்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அது குறித்த மாவட்டத்தின் மொத்த தேர்தல் முடிவுகளிலும் தாக்கம் செலுத்தியிருக்காவிட்டால் வேட்பாளர் நியமனத்தை இரத்துச் செய்ய முடியாது என்று நீதிமன்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் காரணமாக இற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநேகமானவர்களின் உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டி ருந்தாலும் தற்போதைய நிலைமை மக்களின் எதிர்பார்ப்புகளை மூடிமறைத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலைமையை கருத்திற் கொண்டு இந்த புதிய சட்டத்துக்கமைய தேர்தல் ஆணைக்குழு செயற்படும் விதம் தொடர்பில் அறிந்துகொள்வதற்கு மக்களுக்கு இருக்கும் உரிமையை, அரசியல் கட்சி செயலளர்கள் அல்லது ஏற்புடையவர்கள் என ஆணைக்குழு கருதும் நபர்களுக்கு அழைப்பு விடுத்து இது தொடர்பில் கலந்துரையாட வேண்டுமென கோருகிறேன்.

நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பு ரீதியாக தெரிவு செய்யப்பட்ட தலைவராக இருந்தாலும் தற்போது அந்த பதவிக்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் என்ற அடிப்படையில் இந்த சட்டத்தை அமுலாக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.

இந்த கலந்துரையாடலுக்காக உரிய தினம், நேரம் என்பவற்றை தீர்மானிக்குமாறு கோருவதுடன் பொலிஸ் திணைக்களம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கும் இதற்காக அழைப்பு விடுப்பது சிறப்பாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106