வீரர்கள் ஒப்பந்தம் தொடர்பில் காணப்பட்ட கருத்து வேறுபாடு நிறைவு!

Wednesday, July 7th, 2021

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட்டுக்கும் இடையிலான வீரர்கள் ஒப்பந்தம் தொடர்பில் காணப்பட்ட கருத்து வேறுபாடு நிறைவடைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட வீரர்கள் நேற்று (06) மாலை நாடு திரும்பினர்.

இதனையடுத்து, கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திவதற்கு இன்று (07) காலை வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் நாடு திரும்பிய அனைத்து வீரர்களும் கொடுத்த கால எல்லைக்குள் எதிர்வரும் வருடத்திற்கான மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள் தரப்படுத்தலின்போது, பின்பற்றப்பட்ட நடைமுறை வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்ட நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து நோக்கி பயணமானது.

இதேவேளை, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான கால அவகாசம் ஒன்றை வழங்கி குறித்த காலப்பகுதிக்குள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத வீரர்களை இந்தியாவுடனான போட்டியில் இணைத்துக் கொள்வது தொடர்பில்  பரிசீலிக்கப்படமாட்டாது என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


யாழ் மத்திய கல்லூரிக்கு கல்லூரியின் பேருந்து குழுமத்தால் அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து வழங்கிவைப...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் தகவ...
தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தில் மத அமைப்புக்களும் இணைந்து கொள்ள வேண்டும் - பிரதமர் தினேஷ் குணவர்தன...