டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் தகவல்!
Sunday, May 29th, 2022
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்தில் மொத்தமாக 24 ஆயிரத்து 942 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
எனினும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23 ஆயிரத்து 118 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடக்கின் அரச சித்த மருத்துவர்கள்- பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம்!
வெடிகுண்டு அகற்றும் படையணிக்கு உயர்ரக நாய்!
மதுரை – பலாலி இடையிலான மற்றொரு விமான சேவையும் விரைவில் - இந்திய தனியார் விமான நிறுவனங்களுடன் விமானப...
|
|
|


