6 இலட்சம் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை வழங்க ஜப்பானிடமிருந்து சாதகமான பதில்! – ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிப்பு!
Wednesday, June 9th, 2021
இலங்கைக்கு தேவையாகவுள்ள ஆறு இலட்சம் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை வழங்குமாறு, ஜப்பான் பிரதமரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அந்நாட்டிலிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை இந்தியா இடைநிறுத்தியுள்ளது.
இதனால், இலங்கையில் தற்போது, இரண்டாவது மாத்திரை செலுத்துவதற்கு 6 இலட்சம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு, பற்றாக்குறையாகவுள்ள 6 இலட்சம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜப்பானிய பிரதமர் யொஷிஹிதே சுகாவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.
இதற்கு தற்போது சாதகமான பதில் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்களை பாதுகாப்பதற்கே அரசு முன்னுரிமை வழங்குகிறது - பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டு!
சரியான இலக்கை நோக்கி நாம் அடியெடுத்து வைப்பதால் குறைபாடுகள் இருக்கலாம் – குறைகள் சரி செய்யப்படும் என...
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை - 15 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என தகவல்...
|
|
|
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகம் - அமைச்சர் மனுஷ நாணயக்கார ...
பாலியல் சுகாதாரம் தொடர்பில் மாணவர்களுக்கு பாடப் புத்தகம் - கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்பில் விசேட குழ...
மாகாண அரசின் கீழான அதிகாரத்தை மத்திய அரசு எடுக்க முடியாது -அரசியல் யாப்பின் படி அதிகாரம் மத்திக்கு...


