காட்சிப்படுத்தலுக்காக சுற்றாடலை பாதுகாக்க முன் நிற்காமல் பொறுப்பை நிறைவேற்ற ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அழைப்பு!

Tuesday, March 23rd, 2021

காட்சிப்படுத்தலுக்காக சுற்றாடலை பாதுகாக்க முன் நிற்காமல் பொறுப்பை நிறைவேற்ற ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சமூக வலைத்தளங்களில் சுற்றாடல் தொடர்பாக கதைக்கும் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேநேரம் நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளையும் இவ்வருட இறுதிக்குள் சுத்தம் செய்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுற்றாடல் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆறுகளை பாதுகாப்போம் வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து ஆறுகளையும் சுத்தம் செய்வதற்காக இரண்டு ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்நிதி பற்றாக்குறையானால் இவ்வருட இறுதிக்குள் இத்திட்டத்தை நிறைவு செய்வதற்காக மேலதிக நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் செயற்பாடுகளினால் எமது வளிமண்டலம் மாசடைந்தாலும், துரதிஷ்டவசமாக அதன் பிரதிகூலங்களினால் அதிகமாக பாதிப்படைவது அபிவிருத்தி அடைந்து வருகின்ற எமது நாடு போன்ற நாடுகளே என்றும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்கும் திகதியில் மீண்டும் மாற்றம் – வரையறுக்கப்பட்ட மாணவருடன் சமூக இடைவெள...
அபாய நிலை முற்றாக நீங்கிவிடவில்லை - தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றது - ...
தனியார் பேருந்துகளுக்கு இ.போ.ச வுக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்க நடவடிக...