தனியார் பேருந்துகளுக்கு இ.போ.ச வுக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
Tuesday, March 1st, 2022
பொது போக்குவரத்தில் ஈடுபடுகின்ற தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நிதியமைச்சர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கனியவள கூட்டுதாபனத்தின் விலையின் கீழ் இவ்வாறு பேருந்துகளுக்கு டீசல் வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பான மதிப்பீட்டு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பு!
இது காட்டிக்கொடுப்பு அல்ல: கொரோனா தொடர்பில் தகவல்களைத் வழங்குங்கள் - சமூக ஆர்வர்கள் கோரிக்கை!
சுற்றுலா வழிகாட்டிகளுடன் கூட்டிணைந்த ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த யோசனை!
|
|
|


