முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தூரப்பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் அருகிலுள்ள பாடசாலைகளில் இணைக்குமாறு கோரிக்கை!
Friday, June 17th, 2022
கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தூரப்பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமது பிரதேசத்திற்கு அருகிலுள்ள பாடசாலைகளில் இணைக்குமாறு கோரிக்கை விடுக்கும் நிலை அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலவும் எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து மற்றும் பொருளாதார பிரச்சினை காரணமாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுவதாக, கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகள் தொடர்பான பணிப்பாளர் கித்சிறி லியனகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இந்த ஆண்டு இறுதி வரையில் மாத்திரம், குறித்த மாணவர்களை தங்களது இருப்பிடத்துக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் தற்காலிகமாக இணைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடசாலைகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்பளிக்கப்பட மாட்டாது – வைத்தியர் ...
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றிற்கு பாதிப்பு - நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்ப...
துவிச்சக்கர வண்டியால் ஏற்பட்ட விபத்து - மருதனார்மடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று மோட்டார் சைக்கிள்...
|
|
|


