விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைக்க தீர்மானம் இல்லை – கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு!
Wednesday, January 6th, 2021
விமானப்படை வீரர்கள் பாடசாலை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
விமானப்படை வீரர்கள் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் ஆசிரியர்களாக இணைத்து கொள்ளப்பட்டிருப்பதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ள கூற்று தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் றோகினி கவிரத்ன நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..
அத்துடன் இது தொடர்பான விடயங்களை கண்டறிவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது அரசு - விக்டர் ஐவன் !
பாற்பண்ணைப் பகுதிகளில் முடக்கம் தொடரும் - வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் அறிவிப்பு!
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதவாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உறுதி செய்ய வேண்டும் – துறை...
|
|
|


