பாற்பண்ணைப் பகுதிகளில் முடக்கம் தொடரும் – வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் அறிவிப்பு!
Thursday, April 8th, 2021
யாழ். திருநெல்வேலிச் சந்தை மற்றும் சந்தையை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் பெறப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியானதன் பின்னரே சந்தை மற்றும் கண்காணிப்பு வலையமாகவுள்ள பாற்பண்ணைப் பகுதிகளை மீளத் திறப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மிக விரைவில் 2 ஆம் கட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள், சந்தை வர்த்தகர்கள் மற்றும் சந்தையைச் சூழவுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் பெறப்பட்டதன் பின்பே முடக்கம் தளர்வு தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமரர் சாந்தநாயகியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - பிரான்ஸ் நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ த...
சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்துவிற்கான அழைப்பாணையை செல்லுபடியற்றதாக்க மேன்முறையீட்டு நீதி...
|
|
|


