அமரர் சாந்தநாயகியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
Wednesday, February 1st, 2017
அமரர் நவரத்தினத்தினம் சாந்தநாயகியின் பூதவுடலுக்கு மலர் வளையம் சார்த்தி ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளது.
நேற்றயைதினம் காலமான அமரர் சாந்தநாயகியின் இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக சபை உறுப்பினர்கள் மலர் வளையம் வைத்து தமது இறுதி அஞ்சலிகளை தெரிவித்ததுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.
காலஞ்சென்ற அமரர் சாந்தனாயகி ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரும் வேலணை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளருமான நவரத்தினத்தின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.



Related posts:
அதிக கட்டணத்தை அறவிடும் பேருந்துகள் மீது நடவடிக்கை!
சடலங்களுடன் திருமலை துறைமுகத்திற்கு வந்த GAS AEGEAN கப்பல்!
சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நோக்கத்தை விரிவுப்படுத்த இந்திய - இலங்கை நாடுகள் முயற்சி - இலங்கைக...
|
|
|


