ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – பிரான்ஸ் நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவு!
Thursday, October 7th, 2021
இலங்கை பிரான்ஸ் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை பிரான்ஸ் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விசேட கூட்டம் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (06) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவர்ட்டு விசேட விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயகவும் கலந்துகொண்டார்.
இலங்கை பிரான்ஸ் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் இசுறு தொடங்கொடவும், உப தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய மூவரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இதனைவிடவும் பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்ஷன தெனிப்பிட்டியவும் உப செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமியும் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106