கிளிநொச்சியில் 20 வயது இளைஞரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

Sunday, December 6th, 2020

கிளிநொச்சி – பாரதிபுரத்தைச் சேர்ந்த இருபது வயது இளைஞரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு எரிபொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றிய முதியவர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதனை தொடர்ந்து அதனோடு தொடர்பிலிருந்த அருகில் உள்ள குடிநீர் விநியோக நிலையம் மற்றும் மலச்சாலை ஆகியவற்றிலிருந்தவர்களும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது குடிநீர் விநியோக நிலையத்திலிருந்த மூவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர்களோடு தொடர்பிலிருந்த பலருக்கு முதலாவது பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படாத நிலையில்இ முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு 11 வது நாள் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போதே மலர்சாலை இளைஞனுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களது மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts:

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக கடிதத் தலைப்பிட்டு நியமனக் கடிதம்: சட்டவிரோதம் என சுகாதார சிற்றூழியர்கள்...
இன்று பல இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் உரிய தினத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம்...