ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் உரிய தினத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதம்!
Friday, February 14th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் உரிய தினத்தில் நடத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்றையதினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளன.
பதிவு செய்யப்பட்ட 13 கட்சிகளின் செயலாளர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் பாதீடு விவாதம் மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை என்பன நடைபெறவுள்ளன.
எனவே, இவற்றைக் கருத்திற் கொண்டு உரிய தினத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தரம் ஒன்று மாணவர்களின் சீருடை வவுசர்களின் செல்லுபடியாகும் செப்டெம்பர் 30 வரை நீட்டிப்பு – கல்வி அமை...
கடல் நீரின் pH அளவில் மாற்றம் இல்லை - நாரா நிறுவனம் தெரிவிப்பு!
ஜனாதிபதி தலைமையில் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வு – பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு - ...
|
|
|


