99 வீதமானவர்கள் ஜனாதிபதி ரணிலை நிபந்தனையின்றி ஆதரவளிக்க கூறுகின்றனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Monday, November 7th, 2022

தமது தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி தொண்ணூற்றொன்பது வீதமானவர்கள் நிபந்தனையின்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இத்தருணத்தில் ஆதரவளிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணி அமையலாம் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எதிர்வு கூறியுள்ளார்.

மேலும், தொடர்ந்தும் அரசியலில் இருப்பதா இல்லையா என்பதை மஹிந்த ராஜபக்ஷ அவர்களே தீர்மானிக்க வேண்டும் எனவும், மொட்டு கட்சியின் தலைவராக தாம் அவரை தொடர்ந்தும் ஏற்றுக் கொள்வதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதே நேரம், மாவட்ட மட்டத்தில் மொட்டு கட்சியினால் நடத்தப்படும் கூட்டத் தொடரை தனது பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106