சமூகத்தின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பு – 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையில் பிரதமர் அறிவிப்பு!
Tuesday, November 17th, 2020
2021ஆம் ஆண்டுக்கான பாதீடு நிதியமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் தனது பாதீட்டு உரையில், சமூகத்தின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ளார்இ
அத்துடன் கல்வி முறையை மாற்றும் சீர்திருத்தங்களில் அரசாங்கத்தின் முதன்மை கவனம் என்று தெரிவித்திருந்த பிரதமர் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி பொருளாதாரத்தை உருவாக்குவது தமது நோக்கம் என்றும் தேரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த பாதீட்டின் நோக்கம் அரசாங்க செலவினங்களுக்கும் வருவாய்க்கும் இடையிலான இடைவெளியை 9 முதல் 4 சதவீதமாகக் குறைப்பதாகும் என பிரதமர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்களிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டேன் என ஜனாதிபதி ஒருபோதும் கூறியிருக்கவில்லை - அம...
37,500 மெட்ரிக் டன் எரிபொருளுடன் கப்பலொன்று இலங்கை வருகை!
ஜூலை ஒன்றுமுதல் மின் கட்டணத்தில் திருத்தம் - கட்டண முன்மொழிவு பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிப்...
|
|
|


