ஜூலை ஒன்றுமுதல் மின் கட்டணத்தில் திருத்தம் – கட்டண முன்மொழிவு பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிப்பு!
Tuesday, May 16th, 2023
ஜூலை முதலாம் திகதிமுதல் மின்சார சபையினால் அமுல்படுத்தப்படவுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பான மின் கட்டண முன்மொழிவு பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.
அதன்படி, மின்சார கட்டணத்தை 3 சதவீதத்தால் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சார சபை தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன.
மின்சார உற்பத்தி தரவுகள் மற்றும் விற்பனை தரவுகள், எரிபொருள், நிலக்கரி மற்றும் இதர மூலப்பொருட்களின் விலை மற்றும் இந்த ஆண்டுக்கான மின்சார உற்பத்தித் திட்டம் மற்றும் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மின் உற்பத்திக்கான செலவு தற்போது குறைந்துள்ளது. டீசல், பெற்றோல், நிலக்கரி போன்றவற்றின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மின்சாரத் தேவையும் சுமார் 18 சதவீதத்தால் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போதைய நிலைவரத்தை கருத்தில் கொண்டு மின்சார கட்டணத்தை சுமார் 20 வீதத்தால் குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106