மக்களிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டேன் என ஜனாதிபதி ஒருபோதும் கூறியிருக்கவில்லை – அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவிப்பு!
Wednesday, October 13th, 2021
மக்களிற்கு வழங்கிய வாக்குறுதிகளை தான் நிறைவேற்ற தவறிவிட்டார் என ஜனாதிபதி ஒருபோதும் தெரிவிக்கவில்லை என அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை தன்னாலும் அமைச்சரவையாலும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்றே ஜனாதிபதி தெரிவித்தார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தவிர ஜனாதிபதியின் உரைக்கு வேறு அர்த்தம் கற்பிப்பது நியாயமற்ற விடயம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் குறைபாடுகள் காணப்பட்டால் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளும் ஆனால் குறைபாடுகளை அடிப்படையாக வைத்து அரசாங்கத்தின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது என கருதக்கூடாது என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச வைத்திய அதிகாரிகளின் பிள்ளைகளது பாடசாலை பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி உறுதி!
ஜனாதிபதி தஜிகிஸ்தான் பயணம்!
நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்படுபவர்களையும் அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் கண்டறிந்து நடவடிக்க...
|
|
|


