மயிலிட்டியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தெய்வீக அனுபவம்!
Thursday, June 11th, 2020
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைதொலைபேசியில் நாக பாம்பு ஒன்று படமெடுத்து ஆடுவது போன்று காட்சியளித்துள்ளது.
மயிலிட்டு குளத்தடி தேவியார்கொல்லை கண்ணகை அம்மன் ஆலய கட்டட நிர்மாணத்துக்கான அடிக்கல்லினை இன்று நாட்டிய பின்னர் கைதொலைபேசியை பார்த்தபோதே இந்த தெய்வீக காட்சி அமைச்சருக்கு தென்பட்டு்ள்ளது.
இதனால் பரவசமடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தான் அடிக்கல் நாட்டியதை கண்ணகை அம்மன் ஏற்றுக் கொண்டமையின் வெளிப்பாடே இந்த தெய்வீகக் காட்சி என்று தெரிவித்ததுடன் குறித்த ஆலயத்தை திட்மிட்டபடி கட்டி முடிப்பதற்கு பொருளாதார பங்களிப்பினை வழங்குவதற்கும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து சிறப்பித்து ஆலய கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
Related posts:
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஐஸ் பெட்டிகள் வழங்கிவ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இரணைதீவில் பாரிய கடலட்டைப் பண்ணை அங்குரார்ப்பணம்!
தமிழக தலைவர்களுடனான சந்திப்பு சுயலாப அரசியலின் வெளிப்பாடு - டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
|
|
|


