வலி. கிழக்குப் பிரதேசத்தின் சில பிரதேசங்களில் வாழைக்குலைகள் திருட்டு!
Saturday, July 23rd, 2016
வலி. கிழக்குப் பிரதேசத்தின் சில பிரதேசங்களில் அண்மைக் காலமாக வாழைக்குலைகள் திருட்டு அதிகரித்துக் காணப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
புன்னாலைக்கட்டுவன்,ஊரெழு, உரும்பிராய், நீர்வேலி, கோப்பாய் , சிறுப்பிட்டி போன்ற பகுதிகளில் உள்ள வாழைத் தோட்டங்களில் வாழைக்குலைகள் இவ்வாறு திருட்டுப் போகின்றன. தற்போது வாழைப்பழம் அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில் இரவு வேளைகளில் திருடர்கள் வாழைக் குலைகளைக் களவாடி வருவதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்
Related posts:
ஆவா குழுவினரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் - கலட்டி பகுதியில் சம்பவம்!
பேக்கரி உற்பத்திகளின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு!
நீர் கட்டணம் 8 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா நிலுவை - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்ட...
|
|
|


