அரசியல் குழப்பம் – பலாலி விமான நிலைய புதுப்பித்தல் தாமதம்!

Tuesday, January 8th, 2019

பலாலி விமான நிலைய புதுப்பித்தல் பணிகளை இந்திய அரசாங்கம் பிற்போட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றி அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் கடந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

எனினும் இடையில் ஏற்பட்ட அரசியல் தளம்பல் நிலைமைகள் காரணமாக இந்த திட்டம் தற்போது பிற்போடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இந்திய விமானசேவைகள் அதிகாரசபை, பலாலி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

Related posts:

கடந்த இரு மாதங்களில் உண்டியல் முறை மூலம் கோடிக்கணக்கான பணம் பறிமாற்றம் - வங்கி கணக்குகள் பரிசோதனை!
இலங்கையின் பொருளாதாரத்தை அதிகரிக்க சுற்றுலாத்துறையை அதிகம் பயன்படுத்தலாம் - சுவிட்சர்லாந்து தூதுவர் ...
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அடுத்த வாரம் இலங்கை விஜயம் - கடன் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால முதல...