இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங்கின் பெயர் பரிந்துரை!
Wednesday, June 16th, 2021
இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங்கின் பெயரை ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.
வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் நியமனத்தை அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தினால் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜுலி சங் நியமிக்கப்படுவார்.
தற்போது இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான தூதுவராக அலெய்னா டெப்லிட்ஸ் செயற்பட்டு வருகின்றார்.
இவர் 2018 நவம்பர் முதலாம் திகதி முதல் இந்த பதவியை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யுத்தம் காரணமாக அதிகளவான பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர் :வடமாகாண ஆளுநர் ரெஜினோல்...
வடமராட்சி வலய பாடசாலை ஒன்றின் புதிய மாடிக் கட்டடத் திறப்பு விழாவில் அழையா விருந்தாளியாக நுழைந்து ...
பாடசாலைகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்பளிக்கப்பட மாட்டாது – வைத்தியர் ...
|
|
|


