முக்கிய செய்தி

எதிர்வரும் 14ஆம் திகதி ஒரு இலட்சத்து 35 ஆயிரம் மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், ஏல விற்பனை – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!.

Saturday, February 10th, 2024
ஒரு இலட்சத்து 35 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 14ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91... [ மேலும் படிக்க ]

ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் – யாழ்ப்பாணத்தில் ஆறு பேர் பொலிசாரால் கைது யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு பெரும் குழப்பத்துடன் நடைபெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியின் போது ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன் மூன்று பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் ஒழுங்கீனம், பொலிஸாரின் பற்றாக்குறை காரணமாகவும் கட்டுக்கடங்காத பார்வையாளர்கள் மேடைக்கு அருகில் கூடியதாலும் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டது. மேலதிக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்ட போதும் நிலைமை கட்டுங்கடங்காது சென்றது. கதிரை, தண்ணீர் தாங்கி உள்ளிட்ட பல பொருட்கள் சேதமாகின. நேற்றிரவு நிகழ்ச்சியின்போது பலரும் கைது செய்யப்பட்டு கடும் எச்சரிக்கையின் விடுவிக்கப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ஒருவர் மயக்கமுற்றதுடன் பலரும் காயமடைந்தனர். தற்போதைய நிலையில் மூன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 25000 ரூபா அனுமதிச் சீட்டு, 7000 ரூபா அனுமதிச் சீட்டு, 3000 ரூபாய் அனுமதிச் சீட்டு என கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்நதும் அதன்பின்னே இலவசமாக நின்றவாறும் இசைநிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் பெரும்பாலான கூட்டம் அனுமதிச் சீட்டுகளே இல்லாமல் நுழைந்ததால் குழப்பம் ஏற்பட்டது. முதியவர்கள், கைக்குழந்தைகளோடு வந்த பலர் பணத்தை செலுத்தியும் ஆசனங்களின்றி நின்றபடி இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய அவலம் காணப்பட்டதாக பலரும் விசனம் தெரிவித்தனர். பெருமளவு தென்னிந்திய நட்சத்திர கலைஞர்கள் இந் நிகழ்ச்சிக்கு வந்தபோதும் போதிய அளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால் தடுப்புகள் உடைக்கப்பட்டு பலர் குறுகிய இடத்திற்குள் நுழைந்ததுடன்,தடுப்புகளை உடைத்துக்கொண்டு வரும்போது பணம் செலுத்தியும் கதிரைகள் இல்லாமல் நின்றவர்களோடு மோதுப்பட்டு பலர் நிலைதடுமாறி கீழே விழுந்து நெருக்கடி ஏற்பட்டது. பெருமெடுப்பில் ஒழுங்குபடுத்தப்பட்ட பாடகர் ஹரிஹரனின் இசைநிகழ்ச்சி சீரான ஒழுங்குபடுத்தல் இன்மை காரணமாக குழப்பத்தில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது. 000

Saturday, February 10th, 2024
ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் - யாழ்ப்பாணத்தில் ஆறு பேர் பொலிசாரால் கைது! யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு பெரும் குழப்பத்துடன் நடைபெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியின் போது ஆறு பேர்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் டிசம்பர் மாதம் உயர்த பரீட்சையை நடத்த முடியும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, February 9th, 2024
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு செய்வதற்கு நிர்ணய விலை – விவசாய அமைச்சு தெரிவிப்பு!.

Friday, February 9th, 2024
பெரும்போக நெற்செய்கையின் போது அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு விவசாய அமைச்சு விலை நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி, 14 சதவீதம் வெப்பத்தன்மையை... [ மேலும் படிக்க ]

2023 இல் விபத்தில் சிக்கி, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Friday, February 9th, 2024
கடந்த 2023ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லை – 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக காவல்துறை எச்சரிப்பு!

Friday, February 9th, 2024
பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் பொதுத் தேர்தல் – நவாஸ் ஷெரீப் என்.ஏ.-130 தொகுதியில் வெற்றி – இடம்பெற்ற வன்முறைகளில் 9 பேர் பலி எனவும் தகவல்!.

Friday, February 9th, 2024
பாகிஸ்தானில் நேற்று வியாழக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இடம்பெற்ற வன்முறைகளில் 9 பேர் பலியாகியும் இருந்தனர். நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி... [ மேலும் படிக்க ]

வரி அடையாள இலக்கத்தை பயன்படுத்தி தனிப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை இலக்கு வைத்து நிதி மோசடி – குருநாகல் மாவட்ட பிரதிப் பரிசோதகர் அலுவலகம் எச்சரிக்கை!

Friday, February 9th, 2024
இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி அடையாள இலக்கத்தை (TIN) பயன்படுத்தி தனிப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை இலக்கு வைத்து நிதி மோசடி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் முழுமையான ஆசீர்வாதத்துடன் தான் அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்குச் சென்றுள்ளார் – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, February 8th, 2024
ஜனாதிபதியின் முழுமையான ஆசீர்வாதத்துடன் தான் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்குச் சென்றுள்ளார் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Thursday, February 8th, 2024
நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில்  நீதிமன்றங்கள் தலையிட முடியாது  எனத் தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, முட்டாள் தனமாக கதைக்காமல் சட்டத்திற்குட்பட்டு... [ மேலும் படிக்க ]