முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவு தினம்!

Tuesday, May 1st, 2018

கொழும்பு – புதுக்கடை நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள பிரேமதாஸ உருவச் சிலை முன்றலில் இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி காலம்சென்ற ரணசிங்கபிரேமதாஸவின் 25 ஆவது நினைவு தினம் இன்று காலை இடம்பெற்றது.

இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும்கலந்து கொண்டுள்ளனர்.

1978 ஆம் ஆண்டில் இருந்து 1988 ஆம் ஆண்டுவரையான ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியின் அரசாங்கத்தில் பிரதமராக அவர் செயலாற்றினார். பின்னர் 1989 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டுவரை இந்நாட்டு ஜனாதிபதியாக கடமையாற்றினார்.

இந்நிலையில் 1993 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி மே தின பேரணியில் கலந்து கொண்டிருந்த ரணசிங்க பிரேமதாஸ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலில்உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழில் பெற்றோரின் முறையான கண்காணிப்பு இன்மையாலேயே அதிகளவு வன்முறை சம்பவங்களுக்கு காரணம் - மாவட்ட பிர...
சஜித்தின் கட்டுப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி இல்லை - 02 மர்ம நபர்களின் கீழேயே இருக்கிறது - உள்ளதாக ...
இந்தோனேசியாவில் 10 ஆவது உலக நீர் உச்சி மாநாடு - உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பயணிக்கின்றார்...