நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!
Sunday, March 25th, 2018
நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்துமாறு அமைச்சர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இதற்கமைய இந்த வருடத்தின் நாடாளவிய ரீதியான முதலாவது டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஒன்பாதம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது 50 சதவீத வீழ்ச்சியாகும். இதனைக் குறைக்கும் நோக்கில் மேல் மாகாணத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம்அமுல்படுத்தப்பட்டது.
மேலும் டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அழித்துவிட வாரத்தில் குறைந்தது 30 நிமிடமேனும் ஒதுக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர்வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரே தடவையில் கொடுப்பனவு - ஜனாதிபதி!
மற்றுமொரு ஊடகவியலாளருக்கும் கொரோனா தொற்று உறுதி - இதுவரை 5 ஊடகவியலாளர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் ...
வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதித் தடைகள் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படும் - பதில் நிதியமைச்சர் ஷெ...
|
|
|


