கோத்தா வந்தால் நான் வெளியேறுவேன் – முன்னாள் ஜனாதிபதி!

Tuesday, June 7th, 2016

கோத்தபாய ராஜபக்சவை அதிகாரத்துக்கு கொண்டுவர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிமுயற்சிக்குமானால் தாம் அரசாங்கத்துடன் இணைந்திருக்கப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரனாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம், நாட்டை கொள்ளையிட்டவர்களை விரட்டுவதற்காகவேஅமைக்கப்பட்டது. இந்தநிலையில் கோத்தபாயவை அதிகாரத்துக்கு கொண்டு வர முயற்சித்தால், தாம்,அரசாங்கத்துடன் தொடரப் போவதில்லை என்று சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

அத்தனகலையில் வார இறுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தாம் முடமாகிப் போயுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டதாககுறிப்பிட்ட சந்திரிக்கா, தற்போது தாம் முடமாகி உள்ளேனா? என்பதை பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts:


அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் எதிர்வரும் வாரம்முதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் தி...
நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை - நியூயோர்க்கில் ஜனாதிபதி ...
உரிமங்களுடன் தயாராகுங்கள் - ஆதன வரி அறவீடு தொடர்பில் வேலணை தெற்கு கிராம மக்களுக்கு பிரதேச சபை அறிவுற...