உரிமங்களுடன் தயாராகுங்கள் – ஆதன வரி அறவீடு தொடர்பில் வேலணை தெற்கு கிராம மக்களுக்கு பிரதேச சபை அறிவுறுத்து!
Wednesday, August 13th, 2025
…….
வேலணை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கணி உரிமையாளர்களுக்கு ஆதன வரி அறவிடல் தொடர்பாக வேலணை பிரதேச சபை விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமாரின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் –
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வேலணை தெற்கு கிராம சேவையாளர் பிரிவு 3/17 இல் ஆதன வரி அறவிடல் செயற்பாடுகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் (4ம் காலாண்டு) ஆரம்பிக்கவுள்ளது.
இதன்பிரகாரம் குறித்த பிரதேசத்தில் வாழும் காணி உரிமையாளர்கள் தமது காணி தொடர்பான பொருத்தமான ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருப்பதுடன் காணிகளை துப்புரவு செய்து எல்லைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0000
Related posts:
கஜா புயலால் யாழில் பெரும் பாதிப்பு : யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்!
பெண்கள் குழந்தைகள் தொடர்பில் விசேட அவதானம் தேவை - ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ!
தமிழர்களின் மரபுரிமைகளை பாதுகாப்பதில் அமைச்சர் டக்ளஸின் பங்கு நிகரற்றது - பேராசிரியர் புஸ்பரட்ணம் எட...
|
|
|


