அனுமதிக்கான கட்டணத்தை இரண்டு தவணையில் செலுத்தலாம் –  இணையம்!

Friday, February 23rd, 2018

யாழ்ப்பாண மாவட்ட தனியார் பேருந்துகளின் வருடாந்த பாதை அனுமதிக்கான புதிய கட்டணம் முதல் 6 மாத காலத்துக்குள் 4 ஆயிரம் ரூபா செலுத்தவும் அடுத்த 3 மாத காலத்துக்குள் 3 ஆயிரத்து 500 ரூபாவைச் செலுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சரின் கடிதத்துக்கு அமைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பேருந்து உரிமையாளர்கள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று யாழ்ப்பாணப் பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பேருந்து நிறுவனங்களின் இணையம் தெரிவித்தது.

வருடாந்த அறவீட்டு தொகையாக 7 ஆயிரத்து 500 ரூபாவும் மாதாந்த சம்பவ தாளுக்கான தொகை 750 ரூபாவாகவும் அறவிடப்பட்டுள்ளதாக அதிகார சபையால் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தொகை வெளிமாவட்டத்துக்கான சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கே சாதகமானது. இது தொடர்பில் உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரப்பட்டது. இதனையடுத்தே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டது. 6 மாதங்களுக்குள் கோரிக்கை மீள் பரிசீலினை செய்யப்படும் என்றும் முதலமைச்சரால் தெரிவிக்கப்பட்டது. அந்த முடிவை பேருந்து உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். என்று இணையம் மேலும் தெரிவித்தது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106