இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட அபூர்வ இரத்தினக்கல் – கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வம்!
Wednesday, July 28th, 2021
இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரத்தினக்கல் தொகுதியை கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வங்காட்டியுள்ளனர்.
வைரத்திற்கடுத்தபடியான கடினம் வாய்ந்த கனிப்பொருளான குருந்தம் வகைக்கு உட்பட்ட உலகின் மிகப்பெரிய நீலமணி – இரத்தினக்கல் எனக்கருத்தப்படும் இரத்தினக்கல் தொகுதி இரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
510 கிலோகிராம் எடை கொண்ட குறித்த இரத்தினக்கல் இரத்தினக்கல் தொகுதி வீடொன்றிற்கு அருகில் கிணறு தோண்டும் போது கிடைத்திருப்பதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்தது.
இதன் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்ககது.
000
Related posts:
தகவலக்கு ரூ.10000 பரிசு!
பொருந்தொற்றை கட்டப்படுத்த நாட்டுக்கு பூஸ்டர் தடுப்பூசி வேண்டுமாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்க...
தேவைக்கு மேலதிகமாக 7 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவிப்பு!
|
|
|


