நாளைமுதல் வாக்காளர் அட்டை விநியோகம்!
Thursday, January 18th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளை(18) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதேவேளை 19ஆம் திகதி முதல் பெப்ரவரி 4ம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
விசேட வாக்காளர் அட்டை விநியோக தினமாக எதிர்வரும் 28ம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதிக்குள் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாவிட்டால் அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும் எனதிரு.ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
போக்குவரத்து சீரின்மை: கல்வியை விட்டு இடைவிலகும் மாணவர்கள்.
உயர்தர மாணவர்களுக்கான தொண்டமனாறுப் பரீட்சைகள் நாளை ஆரம்பம் – சகல மாணவர்களையும் பரீட்சைக்கு தோற்றுமாற...
கொரோனா தொற்றால் நிர்க்கதியாகியுள்ள 14 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ள...
|
|
|


