அரச நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் 11 வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தம் – நாடாளுமன்றத்துறை மேற்பார்வைக் குழு சுட்டிக்காட்டு!
Monday, August 14th, 2023
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 வேலைத்திட்டங்கள் அரச நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான நாடாளுமன்றத்துறை மேற்பார்வைக் குழு இதனை வெளிப்படுத்தியுள்ளது.
அந்த 11 திட்டங்களுக்காக கிட்டத்தட்ட 2531 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
திட்டங்கள் முடக்கப்பட்டதன் காரணமாக இந்நாட்டு மக்கள் கிடைக்க வேண்டிய நன்மைகளை இழந்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எரிபொருள் விலைகளை ஐ.ஓ.சி நிறுவனமும் அதிகரித்தது!
நாட்டை முழுமையாக முடக்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை - முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன!
திறக்கப்படாதுள்ள உணவகங்களை திறப்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு சுகாதார அதிகாரிகளிடம் அமைச்சர...
|
|
|


